அதிதி பாலன்

"அருவி' படம்மூலம் என்ட்ரியாகி, அதிரவைத்து திரும்பிப் பார்க்கவைத்தவர் அதிதி பாலன். அந்தப் படம் ரிலீசாகி நான்கு வருடங்களாகியும் தமிழ் சினிமாவில் அதிதி பாலனுக்கு வாய்ப்பு எதுவும் அமையவில்லை. காரணம் அதிதி பாலன் பண வசதி படைத்தவர் மட்டுமல்ல; சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலும் கூட. இதனாலேயே பல இளம் டைரக்டர்கள் அதிதியிடம் கதை சொல்லும் முயற்சியில் தோல்வி கண்டனர்.

Advertisment

dd

அதிதியின் தோழிகளும் மேல்தட்டு வர்க்கம் என்பதால், ஸ்டார் ஓட்டல், பார்ட்டி, டான்ஸ் என ஜாலியாகச் சுற்றினார் அதிதி. இவரின் தோழி வட்டத்தில் ஒரே ஒருவர் மட்டும் உருப்படியான ஆலோசனை சொன்னதால், நீண்ட இழுபறிக்குப்பின் நிவின்பாலிக்கு ஜோடியாக மலையாளப் படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார் அதிதி பாலன்.

அதனால்தானோ என்னவோ, அதிரடி கவர்ச்சி காட்டி அட்டகாச போஸ் கொடுத்த ஸ்டில்களை ரிலீஸ் பண்ணியுள்ளார் அதிதி பாலன்.

காயத்ரி

Advertisment

பன்னீர் செல்வத்தின் "18' படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியானவர் காயத்ரி. அதன்பின் விஜய் சேதுபதியுடன் "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என்ற படத்தில் ஜோடி போட்டார்.

aa

அதற்குப்பின் பெரிதாக படங்கள் எதுவும் இல்லை. ஆனால் விஜய் சேதுபதியின் ஆதரவும் அன்பும் இருந்ததால் கவலை இல்லாமல் இருந்தார் காயத்ரி.

Advertisment

இருந்தாலும் தானும் சுயமா சம்பாரிச்சு நாலு காசு சேர்த்தாதானே வருங்கால வாழ்க்கைக்கு பயன்படும் என நினைத்தாரோ என்னவோ, அடக்க ஒடுக்கமாக மூடியபடியே இருந்த காயத்ரியும் லேசாக முந்தானையை விலக்கி போஸ் கொடுத்த ஸ்டில்களை ரிலீஸ் பண்ணியுள்ளார்.

சிருஷ்டி டாங்கே

மும்பை பார்ட்டியான இவருக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படி ஓடிய ஒரே படம் சீனுராமசாமி- விஜய் சேதுபதி காம்பினேஷனில் வந்த "தர்மதுரை'-தான். பரத்துடன் நடித்த "பொட்டு' படம் எப்ப ரிலீசாச்சு, எப்ப தியேட்டரைவிட்டுப் போச்சுன்னு சிருஷ்டி டாங்கேவிற்கே தெரியாது. இப்போது "கட்டில்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

dd

""அய்யோ சாமி! டைட்டில்தான் "கட்டில்'னு இருக்கே தவிர, ஏடாகூடமான படம் இல்ல. நல்ல மெசேஜ் சொல்லும் தரமான படம்'' எனச் சொல்லும் சிருஷ்டியும் பீச்சோரம் ஹாயாக இருக்கும் ஸ்டில்களை ரிலீஸ் பண்ணி அசத்தியிருக்கார்.